நியுயோர்க்: டுவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140லிருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின் படி தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனது போட்டி நிறுவனங்களான பேஸ்புக், வட்ஸ் அப் ஆகியவற்றை சமாளிக்க முடியும் என டுவிட்டர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
டுவிட்டர் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி, அடுத்த மாதம் முதல் நேரடியாக செய்தி அனுப்பும் பகுதியில் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாட்டை நீக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதி என்பது தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. செய்தியை அந்த ஒருவர் மட்டுமே பார்க்க முடியும்.
மற்றப்படி ஒரு டுவிட்டுக்கு 140 என்ற கட்டுப் பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சமூக வலைதளங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
![twitter[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/twitter1.png?w=150&h=56)
Leave a comment