அதிக ஆசனங்களை பெறும் கட்சிக்கு பிரதமர் பதவி

parliamentகொழும்பு: புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். சிறுபான்மைக் கட்சிகளுக்கும் நன்மையளிப்பதாகவே புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என குறிப்பிட்ட பிரதியமைச்சர், அவசர அவசரமாக அன்றி ஐந்து வருடங்களின் பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல்முறை மட்டுமன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டியுள்ள தெனவும் தெரிவித்தார்.

நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கிய பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

விருப்பு வாக்கு முறைக்கு ஐ.தே.க. ஆதரவளிக்காது. தொகுதி அடிப்படையாகக் கொண்ட புதிய தேர்தல் முறையை ஆதரிக்கிறோம். எனினும் அவசரம் அவசரமாக எதையாது கொண்டு வந்து நிறைவேற்ற நினைத்தால் அதற்கு நாம் இணங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கிணங்க 100 நாட்களுக்கு மேல் ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்தவே நாமும் கோருகிறோம்.

பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் பெரும்பான்மை எமக்குக் கிடைத்தாலும் தனியே அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் எமக்கில்லை. ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துக் கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்குத்தாம் ஆதரவளிப்பதில்லை. கையொப்பமிடு வதுமில்லை என இணக்கப்பாட்டுக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தற்போது அதில் கையொப்பமிட்டுள்ளார்.

இத்தகைய பின்னணியில் பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதை விட பாராளு மன்றத்தைக் கலைப்பதே உசிதமானது. இது தொடர்பில் ஐ.தே.க. செயற்குழு தீர்க்கமாகக் கலந்துரையாடி பாராளுமன் றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதாகத் தீர்மானித்துள்ளது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது.

தேர்தல் முறை மட்டும் திருத்தப்படு வதல்ல நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க நாம் இணக்கம் தெரிவித்திருந்தோம். 19 வது திருத்தம் தொடர்பில் நாம் மகிழ்ச்சிய டையவில்லை. அதற்கப்பால் சென்று நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழித்து பாராளுமன் றத்திற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கும் புதிய முறைமை அவசியம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியோடு எந்த தனிப்பட்ட ஒப்பந்தத்தையும் மேற்கொள் ளவில்லை அதை அவர் அண்மையில் உறுதியாகத் தெரிவித்தார்.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கட்சிகள் அமைப்புகள் என 45 கட்சிகளுடன் ஒரு பொது ஒப்பந்தம் செய்யப்பட்டது. கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த இணக்கம் எட்டப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைக் கைப்பற்றாவிட்டால் ஒருபோதும் பிரதமர் பதவியைக் கோராது. அதிகப்படியான ஆசனங்களை பெறுபவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும். அது தொடர்பில் எந்த வாங்குறுதியும் அளிக்கப்படவுமில்லை.

தேர்தல் முறை பற்றி பேசப்படுகிறது. புதிய தேர்தல் முறை சிறுபான்மைக் கட்சிகளுக்கும் நன்மை தரக்கூடியதாக அமைவது முக்கியம் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment