“மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிடின் கடும் நடவடிக்கை”: சவுதி மன்னர்

king salman saudi– இர்ஷாத் அர்சட்

றியாத்: உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் அமைச்சரவை ஜித்தா மாநகரில் கூடியது. அமைச்சரவை கூட்டத்திற்கு மன்னர் சல்மான் தலைமை தாங்கினார். மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு அமைச்சரவை தமது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தது.

முஸ்லிம் இனப்படுகொலையை மியான்மர் அரசு உடனடியாக தடுத்து நிறுத்திவிட்டு பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண பணிகளில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்றும்,

king salman saudi

இதை மியான்மர் அரசு செய்ய தவறினால் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் துணையுடனும் ஐநா சபையின் உதவியுடனும் மியான்மர் அரசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாகவும் சவூதி அரேபியா மியான்மர் அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.

Published by

Leave a comment