மாத்தரை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தென்னிலங்கையிலுள்ள மாத்தரை நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றாலும் அவர் உரையாற்றவில்லை.
எனினும் அதில் பங்கேற்றவர்கள் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அவர் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
ஆவணப் படம்
மாத்தரையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் 70க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment