குறுக்கு வழியால் காவு கொள்ள முனையும் சக்திகளுக்கு ஜனாதிபதி மைத்ரி அடிபணியாது பாராளுமனறத்தை கலைக்க வேண்டும்!
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
கொழும்பு: எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக வெற்றியீட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைமைப் பதவிகளையும் கைப்பற்றியமை நாம் அறிந்த விடயமே.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பிரதமாராக ரணில் விக்கிரமசிங்காஹ் அவர்கள் நியமிக்கப் பட்டாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கத்தை அவர்களால் அமைத்துக் கொள்ள முடியவில்லை.
என்றாலும் வாக்குறுதியளித்தபடி நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்லவும் அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தவும் ஸ்ரிலனாக சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர் பலரை அரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
என்றாலும் பாராளுமன்றம் கலைக்கப் படுவுள்ள நிலையில் மைத்ரி தலைமையில் உள்ள சுதந்திரக கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பவற்றின் கணிசமான ஆதரவாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பொதுத் தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமிக்குமாறு கோரி நாடு முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றமை ஜனாதிபதி மைத்திரி அவர்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளியுள்ளது.
மஹிந்த அரசு கவிழ்பிற்கும், அரசியல் யாப்பு திருத்தங்களுக்கு பின்னாலிருந்து செயற்படுகின்ற ஜாதிக ஹெல உறுமய அமைப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச்யில் இணைந்து இனிவரும் தேர்தல்களில் குதிக்கவுள்ள நிலையில் அதிகரித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செல்வாக்கு அவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முன்னின்று அறிமுகப் படுத்தியுள்ள புதிய தேர்தல் முறையின் கீழ் ஒரு தேசியக் கட்சியில் சங்கமமாகாவிடின் அவர்களின் சிறய கட்சியும் அழிந்து போகும் அபாயம் இருக்கின்றது.
இந்த நிலையில் ஏதோ ஒருவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கது முகாமுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய கட்டாய நிலையில் ஜாதிக ஹெல உறுமய இருப்பதாகவும் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபகஷ அவர்களை நிறுத்தவும், முன்னாள் பாதுகாப்புச் செயாலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை களத்தில் இறக்கவும் பேச்சுவாரத்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்பொழுது சிறை/வைத்திய சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடனும் மந்திராலோசனைகள் பெறப்படுவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர்களது குடும்பத்தினரை அரசியலில் மீண்டும் இணைத்துக் கொள்வது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்திற்கு மாத்திரமன்றி ஏற்படுத்தப்படுகின்ற நல்லாட்சி முன்னெடுப்புக்க;ளுக்கும் அபாரிய அச்சுறுத்தலாகும் என்பதனை வலியுறுத்துகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஜானாதிபதி அவர்களின் அதிகாரங்கள் மட்டுப் படுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் மற்றும் பிரதமமந்திரியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபகஷ மீண்டும் அரசியலுக்கு வந்து பிரதமாரவது ஏற்படுத்தப்பட்டு வரும் நல்லாட்சி மாற்றங்களை மீண்டுமொருமுறை பின்னோக்கி இழத்துச் செல்லும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதேவேளை ஜனாதிபதி மைத்ரி அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படின் பிரதமராக இருப்பவரே ஜனாதிபதியாகும் அவகாசம் இருப்பதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒருவரை தான் பிரம வேட்பாளராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரி வெளிப்படியாக கூறியதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே மாற்று முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலைமைகள் மோசமடையின் பாராளுமன்றத்தை கலைக்காது ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் படியும் ஜனாதிபதி மைத்ரி அவர்களுக்கு அளத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன, அதனடிப்படியிலேயே பிரதமர் ரணில் அவர்களுக்கெதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தயார் நிலையில் உள்ளது, அவ்வாறான ஒரு நிலை வருமெனில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்கள் பிரதமாராக ஆட்சியமைக்குமாரு வேண்டப்படலாம் ஊர்ஜிதப்படுத்தப் படாத ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்ரி உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பதே நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான மற்றும் சாணக்கியமான முடிவாக இருக்கும், மீண்டும் தன்னோடு ஒத்துழைக்க முன்வருகின்ற தரப்புக்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யூடாக சந்திரிக்கா அம்மையாரின் வழிகாட்டலுடன் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதுவும் பின்னர் தேசிய அரசொன்றை மீண்டும் ஒருமுறை அமைப்பதுவுமே நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களை இந்த நாட்டில் வேரூன்றச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
மாறாக, அரசியலமைப்பு, மற்றும் தேர்தல் முறை சீர்திருத்தங்கள், தொகுதிகள் மீள் எல்லை நிர்ணயம் என்பவற்றை காரணம் காட்டி பாராளுமனரத்தின் காலத்தை நீடித்துக் கொண்டிருப்பது நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கே நாளுக்கு நாள் தள்ளிக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல், நிர்வாக மற்றும் ஜனநாயக கட்டமைப்புக்களுக்கு மதிப்பளித்து முன்னாள் அதிபர் ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது அணியொன்றினூடாக அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட உரிமையாகும்.
தனிப்பட்ட மற்றும் தான் சார்ந்த கட்சி அரசியலுக்காக நல்லாட்சி அரசின் பயணத்தை குறுக்கு வழிகளால் நகர்த்த முனையும் சக்திகளுக்கு ஜனாதிபதி மைத்திரி அடிபணிவது தன்னை அதிகார பீடத்திற்கு அழைத்துவந்த அனைத்து அரசியல், சமய,மற்றும் சிவில் சமூக தலைமைகளின் எத்ரிபார்ப்புகளுக்கு சாவு மணியடிக்கும் அரசியல் தற்கொலையாகவே வரலாற்றில் பதியப்படும்.
Leave a comment