கொழும்பு: இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார். இந்த தொடரில் இந்தியாவுடன் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளபோதும் சங்கக்கார முதலாவது டெஸ்ட் போட்டியுடனேயே விடைபெறவுள்ளார்.
“இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு சங்கக்காரவின் பங்களிப்பு விபரிக்க முடியாதது. அவர் ஆடுகளத்திலும் களத்திற்கு வெளியிலும் நாட்டின் கிரிக்கெட்டை வித்தியாசமான தரத்தில் ஒளிரச் செய்தார். அவரது பங்களிப்பை நாம் இடைவிடாது பேணவேண்டும்” என்று இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால சபை தலைவர் சிதத் வெத்தமுனி குறிப்பிட்டுள்ளார்.
சங்கக்காரவுக்கு விடைகொடுக்கவும், அவரது 15 ஆண்டு சேவையை பாராட்டவும் இலங்கை கிரிக்கெட் பாரியதொரு நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
“பில்லியன் மக்கள் கொண்ட நாட்டுடன் அந்த போட்டி நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்துள்ளது. எனவே அது ஒரு பாரிய நிகழ்வாக அமைய வுள்ளது. இந்த நிகழ்வுக்கு நாட்டில் இருக்கும் கௌரவம் கொண்ட பலருக்கும் அழைப்பு விடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். இது கவலையானது. ஆனால் நல்ல விடயங்களுக்கு ஒரு முடிவு உள் ளது” என்றும் வெத்தமுனி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சங்கக்கார ஓய்வு பெற்ற பின் னரும் அவரை முழுமையாக விடுவிக்க இலங்கை கிரிக்கெட் எதிர்பார்க்கவில்லை. இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சங்கக்காரவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஓகஸ்டில் இலங்கை வரும் இந்திய அணி காலி சர்வதேச மைதானத்தில் வரும் ஓகஸ்ட் 18 முதல் 22 வரை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 26 முதல் 30 வரை எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் மூன்றாவது டெஸ்ட் செப்டெம்பர் 3 முதல் 7 வரை பல்லேகலவிலும் நடைபெறவுள்ளது.
சங்கக்கார 2000 ஆம் ஆண்டு காலி மைதானத்திலேயே தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தனது 15 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் அவர் 12,203 ஓட் டங்களை பெற்றதோடு உலக டெஸ்ட் தர வரிசையில் தற்போது முதலிடத்தில் காணப்படுகிறார்.
இதில் தனது கன்னி டெஸ்ட் போட்டி நடந்த காலி அரங்கிலேயே தனது டெஸ்ட் வாழ்வையும் முடித்துக் கொள்ளும் இலக்குடனேயே அவர் இந்தியாவுடனான முதல் டெஸ்டோடு விடைபெற எதிர்பார்த்துள்ளார்.
காலி மைதானத்தில் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் சங்கக்கார 1808 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதன் ஓட்ட சராசரி 54.78 ஆகும். காலியில் சங்கக்கார இதுவரை 7 சதங்களை பெற்றுள்ளார்.
Published by


![kumar-sangakkara-220612[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/kumar-sangakkara-2206121.jpg?w=250&h=439)
Leave a comment