மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மீலாத் தினப் போட்டிகள் மீண்டும் நடாத்தப்படுமா?

requests1விஷேட நிருபர்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் 2015 ம் ஆண்டுக்கான மீலாத் தினப் போட்டிகள்  கடந்த ஜுன்  06ம், 07ம் திகதிகளில் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது. இப் போட்டிகளில் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலைகளில் முதலாம் இடம் பெற்று தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கியமாக கடந்த 07 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராஅத் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நடுவர்களாக கடமையாற்ற வந்தவர்களால் பல்வேறுபட்ட அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் அவர்களின் போட்டி முடிவுகளும் எதிர்பாராதவிதமாகவே கிடைக்கப்பெற்றன.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சுட்டென் (Index Number) வழங்கப்படுவதன் காரணம் அவரின் பெயர், முகவரி, பாடசாலை என்பன பகிரங்கப்படுத்தப்படக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், இந்த கிராஅத் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் நடுவர்களால் போட்டியில் பங்குபற்ற வந்த மாணவர்களிடத்தில் கேட்ட கேள்விதான் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்.

எந்த மத்ரஸாவில் பயில்கிறீர். இந்தக் கேள்வியானது போட்டியின் அடிப்படையையே மாற்றியிருக்கின்றது. அதே போன்றுதான் போட்டியின் முடிவும் அமைந்திருந்தது. அத்தோடு வருகை தந்திருந்த போட்டியாளர்களிடத்தில் மரியாதைக்குறைவாக நடுவர்கள் நடந்து கொண்டதையும் அவதானிக்கப்ட்டது.

மேற்படி விடயங்களை கலந்து கொண்ட போட்டியாளர்களிடம் கேட்டாலே உண்மை புரியும்.

(நீ ஓது, உனக்கு ஓதத் தெரியும் தானே, உன்னுடைய மத்ரஸாவில் எல்லாம் சொல்லித் தந்துதானே இருப்பார்கள். மற்றும் மாணவர்களை எச்சரிக்கும் வகையிலும் நடந்து கொண்டார்கள் நடுவர்கள் நடந்து கொண்டார்கள்.)

வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களே!

மேற்படி மீலாத் விழாவுக்கான கிராஅத் போட்டியின் போது:

1. கிராஅத் போட்டிக்கான நடுவர்களைத் தெரிவு செய்தது யார்?

2. இந்த நடுவர்களுக்குரிய அடிப்படை கல்வித் தகைமைகள் என்ன?

3. இந்த நடுவர்களுக்கான விஷேட தகைமைகள் ஏதும் இருக்கின்றதா?

4. நடுவர்களுக்கும் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் இடையேயான மத்ரஸா

5. இந்த நடுவர்களுக்குரிய முன் அனுபவங்கள் ஏதும் உண்டா?

6. நடுவர்கள் எந்தெந்த  பிரதேசங்களை அல்லது மத்ரஸாக்களை சேர்ந்தவர்கள்?

7. போட்டியாளர்களுடன் நடுவர்கள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தொடர்புகளை

தொடர்புகள் என்ன?

எவ்வாறு வைத்துக் கொண்டார்கள்?

போன்றவற்றினை உடனடியாக ஆராய்ந்து மீள் பரிசீலனை செய்து போட்டியினை ஒரு வாரகாலத்திற்குள் மீண்டும் நடாத்தி தகுதியான மாணவர்களை தெரிவு மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தங்களது வலயக் கல்விப் பிரிவுக்கு விருதுகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும்.

நடுவர்கள் தெரிவு:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராஅத் போட்டிக்கான தகுதியான நடுவர்கள் கிடைக்கவில்லையாயின் கல்முனை பிரதேசத்தில் இருந்தோ அல்லது திருகோணமலை மாவட்டத்தில் இருந்தோ மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

முடிவுரை

நடுநிலைத்தன்மை  நியாயமான தீர்ப்புக்கள் பற்றிய  குர்ஆன் ஹதீஸ்களின் விளக்கங்களைக் கொண்டு இந்த கடித்தினை விரிவுபடுத்த விரும்பவில்லை. எனவே, கடந்த ஜுன் 07 ம் திகதி நடைபெற்ற கிராஅத் போட்டியின் முடிவுகளை மேற்போர்ந்த காரணங்களை கருத்திற் கொண்டு உடனடியாக இரத்துச் செய்து ஒரு வாரகாலத்திற்குள் புதிய போட்டியை நடாத்தி சரியான முடிவுகளை அறிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிரதிகள் :

1. மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணம், திருகோணமலை.

2. கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் – காத்தான்குடி,  ஏறாவூர்   கோறளைப்பற்று மேற்கு

3. பாடசாலை அதிபர்கள்         – போட்டியில் பங்கு பற்றிய பாடசாலைகள்   மட்டும்

4. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்

5. கௌரவ முதலமைச்சர், கௌரவ பிரதியமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் – மட்டக்களப்பு மாவட்டம்.

Published by

One response to “மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மீலாத் தினப் போட்டிகள் மீண்டும் நடாத்தப்படுமா?”

  1. இது முற்றிலும் உண்மையான விடயமாகும். எனது சகோதரியும் இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவராவார். நடுவர் ஒருவரால் வெளியில் வைத்து நீங்கள் தான் முதலிடம் என்று சொல்லப்பட்டும் அறிவித்தல் பலகையில் போடப்பட்ட பரீட்சை முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தான் மிகச் சிறப்பாக ஓதியதாகவும், முதலிடம் கிடைக்கும் என முழு நம்பிக்கையுடன் இருந்ததாகவும், இரண்டாமிடம் என போட்டி முடிவுகள் வெளியானமை மிகவும் கவலையளித்ததாகவும் கூறினார். இது மாணவர்களின் மன நிலையைப் பாதிக்கச் செய்வதோடு, இனி வரும் காலங்களில் இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றுவதனைப் பின் வாங்கச் செய்யும் ஒரு செயலாகும். எனவே உரியவர்கள் இதற்கு தகுந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மீண்டும் போட்டிகள் யாவும் நடாத்தப்பட வேண்டும்.

Leave a reply to Fathima Cancel reply