கொழும்பு: இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட் நிகழ்வில் கலந்தக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தராதர அங்கீகாரத்திற்கான அதிகார சபையான – இலங்கை தராதர அங்கீகார சபை, தராதர அங்கிகாரத்தில் தனது வகிபாகத்தை உணர்ந்து கொண்டுள்ளதோடு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளினது தரம் மற்றும் இணக்கப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பல தராதர அங்கீகாரத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
சுகாதாரம் மற்றும் சமூகப்பராமரிப்பில் தராதர அங்கீகாரத்தை ஊக்குவித்தல் மருத்துவம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான பாதுகாப்புக் கைத்தொழில் துறையின் செயற்பாட்டு விடயங்களை விழித்துரைக்க வழியேற்படுத்துவதன் காரணமாகவும், அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கி உறுதியானதும், ஆரோக்கியமானதுமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஒட்டுமொத்த ஆதரவினையும் வழங்குவதனாலும் நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது எனது அபிப்பிரயாமாகும. பொது மக்களுக்கு சிறந்தவொரு சேவையினை வழங்குவதற்கு சுகாதாரம பராமரிப்பு மற்றும் சமூகப் பராமரிப்பு கைத்தொழில் துறையில் தரம் மற்றும் சேவை வழங்கல் நியமங்களை பலப்படுத்துவற்கு-இலங்கை தராதர அங்கீகார சபை, ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையுடன் இணைந்து பொருத்தமாக தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்தும் என உறுதியாக நம்புகின்றேன். சந்தையிலுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளினது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தராதரதினை பின்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ ஆய்வு கூடங்கள், ; சமூகப் பராமரிப்பு சோதனை அமைப்புக்களையும் இச் சந்தர்ப்பதில் கேட்டுக்கொள்வதோடு இக் கொண்டாட் நிகழ்வில் உலக தராதர அங்கீகார சபைக்கு இந்த செய்தினை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
2014 ஆம் ஆண்டில் இலங்கை தராதர அங்கீகார சபையினால் 83 நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள் அங்கீகரிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் 18.8 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட இதன் மொத்த வருவாய் 2014 ஆம் ஆண்டில் 27.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. இப்போது வெளிநாடுகளில் இருந்து மேலும் பல வாடிக்கையாளர்கள் எம்மை கவர்ந்துள்ளனர் என இலங்கை தராதர அங்கீகார சபையினர் எனக்கு அறிவித்திருந்தனர். அவர்கள அங்கீகாரம் பெற்ற சீனா, இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பொருளாதார நோக்குக்கு அமைய நாம் 2020 ஆம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கான ஏற்றுமதி இலக்கை நோக்கி செல்கின்றோம். போட்டிமிக்க உலக சந்தைகளில்,இலங்கை தராதர அங்கீகார சபையின் அங்கீகார சான்றிதழ் மூலம் உயர் தர பொருட்கள் வழங்கி சர்வதேச சந்தை வெற்றி இலக்குகைளை தொடர்ந்து ஈட்ட முடியும்.
இலங்கை மருத்துவ பரிசோதனை அமைப்புகள் தங்களது தரத்தினை மேம்படுத்த சர்வதேச தரம் ஐளுழு 15189, இற்கு அமைய பின்பற்ற வேண்டும் என்பது எனது கருத்து. சேவைகள், மற்றும் தயாரிப்புக்களின் தரநிலைகள் அதிகரிக்க இலங்கை தராதர அங்கீகார சபை, புதிய முயற்சிகள் வழங்கவுள்ளது என்பதனை இங்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன.; அதாவது இரண்டு புதிய துறைகளுக்கான சான்றிதழ்கள். ஓன்று புதிய சோதனைகளுக்கான சான்றிதழ்கள் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும.
இலங்கை தராதர அங்கீகார சபையினூடாக இன்று சான்றிதழ்கள் பெறும் அங்கீகாரம் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறுதியாக, இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த இலங்கை தராதர அங்கீகார சபை உறுப்பினர்கள் அனைவரும் நன்றி கூறி இந்த இனிமையான மாலை பொழுதினை மகிழ்ச்சியாக நிறைவு செய்ய வாழ்த்துகின்றேன்!
Published by



Leave a reply to cassim Cancel reply