லாபிர் ஹாஜியார் கண்டியில் தனித்து களமிறங்குகறார்?

lafir Hajiyarகண்டி: மத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் லாபிர் ஹாஜியார் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இடம் கிடைக்காவிட்டால் தனித்து சுயேட்சை குழுவாக களமிறங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் சாதாரண வியாபாரியான அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 27 000 வாக்குகளை பெற்றார். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்ட அவர் 45 ஆயிரம் வாக்குகளை பெற்று ஐக்கிய தேசிய கட்சி காரராக அதி கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

இவர் சாதாரண மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நிலையில் எதிர் வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டல் லாபிர் ஹாஜியாருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகின்றது.

lafir Hajiyar
லாபிர் ஹாஜியார்

இந்த நிலையில் மக்கள் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்துகின்றதனால் அவர் பொதுத் தேர்தலில் தனித்துபேட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கடந்த காலங்களில் 3 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுவருவதுண்டு. எனினும் இம்முறை இரு வேட்பாளர்களே களமிரக்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக பைஸர் முஸ்தபா மற்றும் அஸாத் சாலி ஆகியோர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்புகள் இருக்கின்றது. மட்டுமன்றி காதர் ஹாஜியாரும் தனித்து களமிறங்குவதாக குறிப்பிட்டிருக்காறார். இவ்வாறு லாபிர் ஹாஜியாரும் தனித்து போட்டியி்ட்டால் கண்டி மாட்டத்திலுள்ள முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பிரதிநிதித்துவம் இல்லாமல்போகு வாய்ப்புகள் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment