18வது குழந்தையைப் பெற்றெடுத்த பிரிட்டனின் பெரிய குடும்பம்!

kids familyலண்டன்: பிரிட்டனில் ஏற்கனவே 2 பேரக் குழந்தைகள் உள்ள தம்பதி தங்களது 18வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளது. ஹெல்லி அல்பியா பியு என்று இப்பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை குழந்தையின் தாய் சுவ் ரோட்போர்ட் மற்றும் தந்தை நோயல் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் தனக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதால் பயத்தில் இருந்த சுவ், தற்போது ஹெல்லி, எவ்வித சிக்கலும் இன்றி பிறந்ததால் நிம்மதியடைந்துள்ளார். பதினான்கு வயதில் தனது முதல் குழந்தையான கிரிஸ்சை பெற்றெடுத்த சுவ் தற்போது 18வது குழந்தையை பெற்றெடுத்ததால் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

kids family

முதல் மகனான கிரிஸ்சுக்கு தற்போது 25 வயது ஆகும் நிலையில், இத்தம்பதிக்கு 19 வயதில் க்ளோ, 17 வயதில் ஜேக், 15 வயதில் டேனியல், 14 வயதில் லூக். 13 வயதில் மில்லி, 12 வயதில் கேட்டி, 11 வயதில் ஜேம்ஸ், 9 வயதில் எல்லி, 8 வயதில் எய்மி, 7 வயதில் ஜோஷ், 6 வயதில் மேக்ஸ், 4 வயதில் டில்லி, 3 வயதில் ஒஸ்கர், 2 வயதில் கெஸ்பர் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் இத்தம்பதியருக்கு 2 பேரக்குழந்தைகளும் உள்ளன. 10 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தங்கியுள்ளனர். தங்களது 18 ஆவது குழந்தையோடு குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தப்போவதாக கடந்த ஆண்டு கூறிய சுவ் தம்பதியினர் தற்போது மற்றொரு குழந்தையையும் அடுத்த ஆண்டு பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment