கொழும்பு – தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: கொழும்பு – தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மீலாத் நபி போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கரம் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பெரோஸா முஸம்மில், இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், கலைஞர் கலைச்செல்வன் மற்றும் கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாதனிகளும் வெற்றி பெற்றவர்களுக்கான கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment