லண்டன்: உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் இளைஞர்களை தனது இயக்கத்தின் பக்கம் திருப்ப ஐஎஸ் அமைப்பு என்ன மாதிரியெல்லாம் செயல்படுகிறது என்பது குறித்த விவரம் படிப்படியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில், பெண்களை வைத்து இளைஞர்களை தன் வயப்படுத்தும் முயற்சியிலும் அந்த அமைப்பு ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
‘ஹனி ட்ரப்’ (Honey Trap) ஆளை மடக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ரொம்பப் பழைய ஸ்டைல் இது. ஆனால் இன்று வரை இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்பதுதான் ஒவ்வொரு நாட்டு ராணுவமும் இதைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் ஐஎஸ் இயக்கமும் இந்த ஹனி ட்ரப்ப்பைப் பயன்படுத்தி பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வருகிறதாம்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் கல்யாணைச் சேர்ந்த ஆரிப் மஜீத்தும் இப்படிப்பட்ட ஹனி டிராப்பில் சிக்கிய இளைஞர்தான். ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து ஈராக்கில் டொய்லெட் கழுவும் நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் தற்போது அங்கிருந்து மீண்டு வந்தவர். இவரை தஹிரா பட் என்ற பெண்ணின் பெயரால் ஹனி ட்ரப் செய்து இழுத்தனர் தீவிரவாதிகள்.
சிரியாவிலிருந்து தஹிரா பட் என்ற பெண், மஜீத்துக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து பேச ஆரம்பித்தபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை மஜீத்துக்கு. என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் மஜீத்இ தஹிராவின் வலையில் வீழ்ந்தார்.
முன்பெல்லாம் பெண்களே நேரடியாக இதில் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. ஒன்லைனில் வந்து பூசி மெழுகிப் பேசி மயக்குகிறார்கள்.ஹனி ட்ரப் மூலம் கிட்டத்தட்ட 500 பேர் வரை ஐஎஸ் அமைப்பு ஆள் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதற்கான பெண்களை ஈராக் அல்லது சிரியாவிலிருந்து அவர்கள் தேர்வு செய்து பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் தங்களது டார்கெட் இளைஞர்களை ஒன்லைனில் பேசி மடக்கி தங்களது வழிக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து ஐஎஸ் பக்கம் திருப்பி விடுகிறார்கள்.
பல பெண்கள் தங்களது வலையில் விழும் ஆண்களை ஒன்லைனிலேயே திருமணமும் செய்து முழுமையாக நம்ப வைத்து விடுகிறார்கள். இவர்களில் பலர் அப்பெண்களை நேரில் சந்திக்க விரும்பி ஈராக் அல்லது சிரியாவுக்குப் போய் தீவிரவாத இயக்கத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஐஎஸ் அமைப்பு ஒன்லைனில் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவர்கள் ஒன்லைனைக் கண்காணிக்க மட்டும் 10இ000 பேரை வைத்துள்ளர். இவர்களது வேலையே தங்களுக்குச் சாதகமான இளைஞர்களை இழுப்பதுதான்.
பேஸ்புக்கைத்தான் இவர்கள் முக்கியமாக குறி வைக்கிறார்கள். அதில் உள்ள சாதகமான இளைஞர்களுக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுப்பது, சட் செய்வது என்று இறங்கி தங்களது பக்கம் கொண்டு வருகின்றனர் இந்தப் பெண்கள்.
சில இளைஞர்களை மடக்க பல மாதம் கூட தொடர்ந்து பேசிவருகிறார்கள் இந்நங்கைகள். இந்த ஹனி ட’ரப் முறையை ஐஎஸ் அமைப்பு மிகவும் வெற்றிகரமாக கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment