காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா (05.06.2015) வெள்ளிக்கிழமை பி.ப.03.30) கல்லூரியின் அதிபர் கெப்டன் யூ.எல்.ஏ.முபாறக் தலைமையில் நடை பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணண் கலந்து கொண்டார்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஜ. சேகுஅலி, பிரதி கல்விப்பணிப்பபாளர் எம்.எம்.இஸ்மாலெப்பபை,காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் உட்பட உயர்மட்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப ஆய்வு கூடம் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ் இராதாகிருஷ்ணண் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினுல் இயங்கும் பல பிரிவுகள் ஏனைய அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
1 Mathematics lab
2. Nanasa distance education lab
3. Language lab
4. Information & communication
5. Technology centre
அதிபர் தலைமை உரை நிகழ்த்திய போது காத்தான்குடி மண்ணுக்கு முதல்தடவையாக அதிலும் எமது பாடசாலை தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவினில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஷ்ணண் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் ,
இந்த தொழில்நுட்ப ஆய்வு கூட உருவாக்கம் அதன் அபிவிருத்திக்கு பல்வேறுபட்ட வழிகளிலும் முயற்சி செய்த, உதவிய முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பார்பாக தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ. முபாறக் அவர்கள்.
கௌரவ அமைச்சரின் பதவிக்காலத்தினுல் எமது பாடசாலைக்கு முடியமான உதவிகளை செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டதுடன் மகஜர் ஒன்றும் பாடசாலை அதிபரினால் கையளிக்கப்பட்டது.
ஒரு பாடசாலை நல்ல ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை உருவாக்க வேண்டும் அப்போதுதான் மனித நேயமுல்ல வைத்தியரை, பொறியலாளரை பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஜ. சேகுஅலி அவர்கள் தனது உரையின் போது தெரிவித்தார்.
பாடசாலை அதிபரினால் கௌரவ அமைச்சர் வீ. எஸ் இராதாகிருஷ்ணண் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கௌரவ அமைச்சர் வீ. எஸ் இராதாகிருஷ்ணண உரையாற்றுகையில் காத்தான்குடிக்கு வரக்கிடைத்தமை எனக்கு கடவுள் செய்த பாக்கியம் என்றார்.
இவ்வாறான தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை ஒரு பாடசாலை பெற்றுக் கொள்வதானது மிக பெரிய அதிஸ்டம் எனத்தெரிவித்தார். இந்த ஆய்வு கூடத்தை அமைக்க முயற்சி எடுத்த முன்னால் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை நினைவுபடுத்தினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு மகத்தானதாக அமைந்தது எனவும் குறிப்பட்டார்.
சீ.டபிலியு. டபிலியு. ஆர். கண்ணங்கரா அவர்களினால் உருவாக்கப்பட்ட மஹா வித்தியாலயங்களில் முஸ்லிம்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட மஹா வித்தியாலம் இந்த காத்தான்குடி மத்திய கல்லூரி என அறிந்தேன்.
உங்கள் பாடசாலை மேலும் வழர்ச்சி அடைய வேண்டும் இவ்வாறான தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை நல்லமுறையில் பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் பயனடைந்து கொள்ள வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஷ்ணண் தெரிவித்தார்.
Published by

Leave a comment