காத்தான்குடி: சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி நேற்று காத்தான்குடி பிரதேச திவிநெகும உத்தியோகத்தர்களை சந்தித்து காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் திரிய சவிய கடன் திட்டம் கொடுக்கும்போது ஏற்படும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன ஆட்சியில் மக்களின் தேவைகள், வறுமையை நோக்காகக் கொண்டே பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன எனவும் கடன் வழங்கும்போது ஸதக்கத்துல் ஜாரியாவின் நிலைப்பாட்டிலேயே அதனை நினைத்து வழங்குமாறும் தெரிவித்தார்.
மேற்படி கலந்துரையாடலின்போது மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி குணரெட்ணம் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் திவிநெகும முகாமையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் மாஹிர் ஹாஜியார் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் லெவ்வை ஹாஜியாரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment