காத்தான்குடி ‘அல்அக்ஸா’ பள்ளிவாயலுக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

al aqsa– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்(அல்அக்ஸா வடிவிலான) பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகள் சென்ற 09.03.2015 ஆம் திகதி ஆரம்பமானதுடன் கட்டுமான வேளைகள் இன்றுவரை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இதனைப்பார்வையிட (06.06.2015 சனிக்கிழமை) காலை முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கட்டுமான விடயங்களை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கட்டுமாண வேளைகளை இன்னும் விரைவாகவும், அவசரமாகவும் மேற் கொள்ளுமாறு பணியாளர்களை பணித்ததுடன் எதிர்வரும் ரமழான் மாத தராவீஹ் தொழுகையினை இப்புதிய பள்ளிவாயலின் ஓர் பகுதியில் ஆண்கள் இபெண்கள் தொழுவதற்கான ஏற்பாடுகளை அவசரமாக செய்து கொடுக்குமாறும் உரியவர்களை முன்னால் பிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பணித்தார்.

al aqsa

இதனடிப்படையில் இவ்வருட தராவீஹ் தொழுகையினை ஆண்கள், பெண்கள் சகலரும் புதிய பள்ளிவாயலில் தொழக் கூடிய ஏற்பாடுகளை தாங்கள் மேற் கொண்டுள்ளதாக பள்ளிநிர்வாகிகள் தெரிவித்தனர்.

al aqs

மேற்படி பள்ளிவாயலின் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் கையிலிருப்பில் உள்ள பணம் முடிவதற்கு 3 மாதகாலங்களுக்கு முன் தனக்கு தெரியப்படுத்துமாறும் பள்ளிவாயல் நிர்வாகிகளை வேண்டிக் கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.

al aqsa (2)

தனது சவுதி அரேபிய விஜயத்தின் போது பள்ளிவாயலினை அழகு படுத்தல் தொடர்பான பல கலைநுட்பம் நிறைந்த பல புகைப்படங்களை கொண்டு வந்து கட்டுமான பொறியிலாளர்கள், பொறுப்பாளர்களிடம் கான்பித்ததாகவும் இதன் போது தெரிவித்தனர்.

al aqsa (3)

Published by

Leave a comment