பேர்லின்: சற்று முன்னர் ஜேர்மனியின் பேர்லின் நகரின் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய சம்பியன் லீக் இறுதியாட்டத்தில் 3:1 எனும் கோல் அடிப்படையில் ஜிவிண்டஸ் அணியைத் தோல்வியடையச் செய்து, பார்ஸிலோனா ஐரோப்பாவின் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
பார்ஸிலோனா சார்பாக முதலாவது கோலை ஐவன் ரகிரிக்ட்டும், இரண்டாவது கோலை லூயிஸ் சுஆரெஸூம் மூன்றாவது கோலை நெய்மாரும் பெற்றுக்கொடுத்து, பார்ஸிலோனாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த வெற்றியுடன் ஐந்தாவது முறையாக பார்ஸிலோனா ஐரோப்பியச் சம்பியனாக முடிசூடிக்கொண்டுள்ளமை குறிகப்பிடத்தக்கது.
Published by


Leave a comment