கொழும்பு: அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சிற்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் 06 தேரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் பிரியந்த லியனகே நேற்று பொலிஸாருக்கு இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வட்டரக்க விஜித்த தேரர் மறைந்திருப்பதாக கூறி அமைச்சின் கட்டிடங்களை குறித்த தேரர்கள் தாக்கியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான தேரர்களுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Published by

Leave a comment