உலகக் கிண்ணம் 2022 கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த இங்கிலாந்து தயார்!
– MJ
லண்டன்: சர்வதேச உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) ஊழல் மோசடியின் பின்னர் மீண்டும் கட்டார் 2022 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு சோதனை ஆரம்பித்திருக்கின்றது. உலகக் கிண்ணம் 2022 போட்டிகளை நடாத்த கட்டாருக்கு வழங்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் கட்டார் உலகக் கிண்ண சபை பல சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கிவருகின்றது.
அந்தவகையில் ஃபீஃபா சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியே கட்டார் 2022 உலகக் கிண்ண சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டது எனவும்,
கடுமையான உஷ்ணம் நிலவும் கட்டாரில் அதுவும் கோடைகாலத்தில் உலகக் கிண்ணம் இடம்பெறுவது குறிப்பாக ஐரோப்பிய வீரர்களின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் எனவும்,
கட்டார், உலகக் கிண்ணத் தொழிலாளர்களை மனித உரிமைக்கு அப்பால் அழுத்தி, வேலைவாங்குவதாகவும், இதன்காரணமாக இதுவரைக்கும் 2500 பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் கட்டார் மீது குற்றஞ்சாட்டிவருகின்ற இந்நிலையில்,
இங்கிலாந்தின் வெம்ளி மைதானம்
இலஞ்சம் கொடுத்துத்தான் கட்டார் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றது என்பது நிரூபிக்கப்படுமாயின், கட்டாரின் சந்தர்ப்பத்தை தனதாக்கிக்கொள்ள பல நாடுகள் முயற்சித்து வருகின்ற போதிலும், இங்கிலாந்து அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றது.
இங்கிலாந்து 1966ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியை நடாத்தி இருந்ததும், இதன்போது இங்கிலாந்து உலகச் சம்பியனானதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment