ஆப்கானிஸ்தானில் குறைந்தது பத்து தலிபான்கள் அவர்களது எதிரியான இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்

isis (2)காபூல்: ஆப்கானிஸ்தானில் குறைந்தது பத்து தலிபான்கள் அவர்களது எதிரியான இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆப்கானிய இராணுவம் கூறுகிறது. இந்தக் கொலை நாட்டின் கிழக்குப் பகுதியில் நடைபெற்றுள்ளதாகவும் ஆப்கான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் இவ்வகையில் தலிபான்கள் கொல்லப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

இந்தக் கொலைகள் குறித்த விபரங்கள் இராணுவத்தின் இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தவறுதலாக அது ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய தொலைதூர மாவட்டமான அச்சினில் இந்த இருக் குழுக்களுக்கும் இடையே பல வாரங்களாக நடைபெற்ற கடுமையான மோதல்களை அடுத்து தலிபான்கள் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

(ஆவணப்படம்)

Published by

Leave a comment