கொழும்பு: நாரஹேன்பிட்டிய பொருளாதார மத்திய ஸ்தானத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மினி ஆகாய விமானம் இரத்மலானை ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் இன்று வியாழக்கிழமை முதல் அங்கு இவ்விமானத்தைப் பார்வையிடலாம்.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவின் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமானது எனக் கூறப்படும் இவ்விமானம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானியும், பேராசிரியருமான ஆர்.விஜயவர்தனவினால் நிர்மாணிக்கப்பட்ட இம்மினி விமானம் பிற்காலத்தில் திரைப்பட இயக்குநர் சந்திரன் ரத்தினத்துக்கு அன்பளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு.
Published by


Leave a comment