தேர்தல் மறுசீரமைப்பும் முஸ்லிம்களும் – விசேட மாநாடு

NFGG-Logo– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: தேர்தல் மறுசீரமைப்புக் குறித்த 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மிக விரைவில் பாராளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் மக்களின் கருத்துக்கள் போதிய அளவில் முன்வைக்கப்படவில்லை என்ற குறைபாடு பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), ‘தேர்தல் முறை மாற்றம் தேசிய

ரீதியில் மற்றும் முஸ்லிம் சமூக மட்டத்தில் எத்தகைய சாதக பாதகங்களை கொண்டிருக்கிறது’ என்று விரிவாகக் கலந்துரையாடுவதற்கான விசேட மாநாடு ஒன்றினை இன்று (03.06.2013) கொழும்பில் நடாத்தவுள்ளது.

கொழும்பு ௦7, ஹெக்டர் கொப்பேக்கடுவ மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகும் இம்மாநாட்டிற்கு, 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை வடிவமைத்த முக்கிய புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் வளவாளர்களாக பங்கேற்பார்கள்.

இது குறித்த அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் ஆர்வமுள்ளவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்க முடியும் என NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹமத் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment