சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய ஈத்தம்பழப் பொதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளிப்பு

unnamedபுவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: புனித றமழான் மாத வருகையை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடாக வழங்கியிருந்த பேரீத்தம்பழப் பொதிகளை, கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் துறை அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். ஹலீம், கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு இப்பேரீத்தம்பழத்தினை விநியோகிக்கும் பொறுப்பினை ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவிற்கான அமைப்பாளரும், காத்தான்குடிப் பிரதேச அமைப்பாளருமான ஜனாப் எச்.எம்.எம். முஸ்தபா ஜே.பி.யிடம் பொறுப்பளித்திருந்தார்.

ஐ.தே.கட்சியின் காத்தான்குடி பிரதேச மத்திய குழுவின் தலைவரும், காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளருமான ஜனாப். கே.எம்.எம். அலியார் ஜே.பி., காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனாப். எம்.ஏ.எம். மிஹ்ழார் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட  இந்நிகழ்வில் இப்பேரீத்தம்பழப் பொதிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கு அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா ஜே.பி. யினால் கையளிக்கப்பட்டன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், புனித றமழான் மாதம் பிறப்பதற்கு முன்னரே சவூதி அரசாங்கம் வழங்கிய பேரீத்தம்பழங்களை சிறந்த முறையில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளிடம் கையளிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்காக அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment