சூரிய சக்தி விமானத்தின் சாதனை பயணம் ஒத்திவைப்பு

solar planeஹவாய்: சூரிய சக்தியைக் கொண்டு உலகை சுற்றிவரும் விமானத்தின் அடுத்த கட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடல் மீதான மோசமான கால நிலை காரணமாக சீனாவிலிருந்து ஹவாய் செல்லும் இந்த சோலார் இம்பல்ஸ் விமானத்தின் பயணம் கைவிடப்பட்டு, அந்த விமான ஓட்டுனருக்கு ஜப்பானுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹவாய்க்கு செல்லும் இந்த ஆறு நாள் பயணம்தான் மிகவும் முக்கிய கட்டமாக பார்க்கப்பட்டது.

ஒரு ஜம்போ ஜட் விமானத்தின் அளவு இறக்கையைக் கொண்ட இந்த விமானம், ஒரு சராசரி குடும்பகாரின் எடையை மட்டுமே கொண்டது.சூரிய சக்தி கொண்டு இயங்கும் இந்த விமானம் சரியாகப் பறக்க, சாதகமான காற்றும் மேகம் அற்ற வானமும் தேவை.

solar plane

Published by

Leave a comment