சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி

unnamed1எச்.எம்.பாத்திமா ஷா்மிலா

மட்டக்களப்பு: சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இவைகளின் பாவனையை கட்டப்படுத்தும் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை காலை (01) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

புளியந்தீவு திவிநெகும வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு ஊர்வலம் கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக காந்திப் பூங்கா வரை சென்றது.

மன்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். சிவராஜா புகைத்தல் ஒழிப்பு வாரக் கொடியை வாங்கி நிதி சேகரிப்பை ஆரம்பித்து வைத்தார்.

முகாமைத்துவப் பணிப்பாளர் நிர்மலாதேவி கிரிதரன், முகாமையாளர் கே. நவரஞ்சன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. அருளாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே வேளை கல்லடி மற்றும் நாவற்குடா வாழ்வின் எழுற்சி வங்கியின் ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து ஆரம்பமாகி கல்முனை மட்டக்களப்பு பிரதான விதி வழியாக நாவற்குடா சமுர்த்தி வங்கி வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment