அரசாங்கத்தில் இருந்து விலகிய 4 அமைச்சர்களின் பரிதாப நிலை!

ministersகொழும்பு: டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த வாரம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர். அரசாங்கத்தில் இருந்து விலகி தம்முடன் இணைந்து கொள்ளுமாறு இவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதவிகளில் இருந்து விலகுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை கொடுக்க முடியும் எனவும் அதனூடாக தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் இவர்கள், சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களிடம் கூறியுள்ளனர். டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய பின்னர் ஒரே ஒரு பேச்சுவார்த்தை கடந்த 25 ஆம் திகதி நடந்துள்ளது.

ministers

19 மற்றும் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே தாம் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையின் போது திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதனால் மிக நெருக்கடியான நிலையில் இந்த 4 அமைச்சர்களும் இருக்கின்றனர்.

Published by

One response to “அரசாங்கத்தில் இருந்து விலகிய 4 அமைச்சர்களின் பரிதாப நிலை!”

  1. இருந்த பஸ்ஸிலிருந்து என்றுமே வராாத பஸ்ஸுக்காகக் காத்திருந்து கைசேதப்படப்படுபவர்கள். ஆனால், இவர்கள் இருந்த இருக்கைகளில் அவர்கள் சகாக்களே ஏறிக் கொள்வர் என்பதை அறியாதிருந்தமை இவர்களின் அனுபவ வரட்சியைக் காட்டுகின்றது.

    ஐந்து நிமிட பஸ் பிரயாணத்திலும் இருப்பதற்கு சீட் பிடிக்க ஆலாய் பறக்கும் சமூகத்தில், ஐந்து நிமிடம் என்ன ஐந்து வினாடிகளாவது அமைச்சுப் பதவியில் அம‌ரத் துடிக்கும் அதற்காக எதையும் இழக்கும், யாரையும் காட்டிக் கொடுக்கும் பண்பில் இன்பம் கண்டோர்தான் ஜனவரி 9ஆந் திகதிக்குப் பினனரும் உள்ள மன்றில் இருக்கிறார்கள் என்பதை மறவாதிருந்தால் இந்நிலை ஏற்பட்டிராது.

Leave a reply to nizamhm1944 Cancel reply