மட்டக்களப்பு: மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே கழுத்துப் பகுதியில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக நேற்றைய தினம் அவர் மயங்கி விழுந்ததனால் இன்று அவர் கடமைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவரது வீட்டிற்கு வருகை தந்த இருவர் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போதே அவரின் தலைப்பகுதியில் சிறிய ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தலையில் காயமடைந்த மதிதயான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment