கொழும்பு: பொதுபல சேiனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை 5000 ரூபா காசுப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பௌத்தாலேக மாவத்தையில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் அணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது சட்டவிரோதமாக மக்களை ஒன்றுதிரட்டியமைக்காக ஞானசார தேரருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டிற்கு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததனால் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாக இன்று (26) தேரரர் கைது செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டில் இருந்து அவர் வந்து சோர்ந்தது இன்றைய தினமே என்றும் பொலீஸார் நீதிமன்றத்திற்கு விளக்கினர்.
ஜூலை 13ஆந் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரை நீதிமன்ற சிறையில் வைக்காது பொலீஸ் காவலரணிலிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தமைக்காக பொலீஸாரை நீதவான் நீதிமன்ற நீதிபதி கடிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment