கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களும் தாய்லாந்தின் இறுக்கமான நிபந்தனைகளும்
பேங்கொக்: அந்தமான் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பர்மா முஸ்லிம் குடியேறிகளுக்கு, தாய்லாந்து கடற்படை உதவிகளை வழங்கத் தொடங்கும் என்றாலும் அவர்கள் தமது நிலப்பரப்பினுள் கொண்டுவரப்பட மாட்டார்கள் என தாய்லாந்து அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
தாய்லாந்து மீது பலவாரங்களாக சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்த நிலையில், குடியேறிகளுக்கு உதவி செய்வது மீதான தமது நிலைப்பாட்டை, தாய்லாந்து மாற்றியுள்ளது.
ஆனாலும் மலேசியா மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகள் அகதிகளை கரைக்கு கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கையில் இணைந்து கொள்ள தாய்லாந்து மறுக்கின்றது. பதிலாக, கடலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றை பெரிய கடற்படை கப்பல் ஒன்று வழங்கும் என, தாய்லாந்து குறிப்பிட்டுள்ளது.
தாய்லாந்து படையினர் கடலில் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் மாத்திரமே அவர்கள் கரைக்கு கொண்டுவரப்படுவார்கள் என்பதுடன், அப்படி வருபவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதப்பட்டு வழக்கை எதிர்கொள்வார்கள் எனவும் தாய்லாந்து அரசு கூறியுள்ளது.
துருக்கியைத் தவிர வேறு எந்த அரபு, இஸ்லாமியநாடுகளும் இந்த அகதிகளை மீட்க கருணை காட்டவில்லை என்பது கவலையளிக்கிறது.
Leave a comment