கோட்டாபய, பசில் ஆகியோருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாசுதேவ நாணக்கார எதிப்பு

gota basil– எம்.ஐ.அப்துல் நஸார்

கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோhர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தான் எதிப்புத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஹிரு தொலைக்காட்சியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

‘கோட்டாபயவை நான் எல்லா வகையிலும் எதிர்க்கின்றேன். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். பாராளுமன்றத்திற்கு அருகிலிருந்த நினைவுத் தூபியை நாம் அகற்ற வேண்டாம் எனக் கூறியபோதும் பலவந்தமாக அதனை அகற்றினார். அதற்கு வேறொரு இடத்தை தருமாறு கோரியபோதும் அதனைத் தரவுமில்லை. அவர் அதிகாரத்திற்கு வருவதற்கு தகுதியற்றவர்’

இது தவிர அவரிடம் கேட்கப்பட்ட மற்றுமொரு கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தன்னால் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது எனவும் அதனாலேயே தான் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். உலகில் பல நாடுகளில் கூட்டாட்சியே இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ எந்தக் கட்சியில் போட்டியிடுவார் என வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் ‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார். வேட்பு மனுவில் அதன் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் கையொப்பமிடுவார். அதற்கான அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருக்கு உண்டு’ எனவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment