காத்தான்குடி பிரதேச முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு- ஓடியோ முழுமையாக இணைப்பு

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 24 ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி ‘கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்’டில் வைத்து விஷேடமாக சந்தித்து கலந்துரையாடினார்.

இதில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள் , எஸ்.எம்.எஸ்.குறுஞ் செய்தியாளர்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஊடகவியலாளர்களினால் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட்டது.

இது தொடர்பான முழுமையான ஒலிப்பதிவு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

உரையைக் கேட்க இங்கே சொடுக்குக

hizbullah

Published by

Leave a comment