இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு லண்டனில் கண்டுபிடிப்பு

bombலண்டன்: வடமேற்கு லண்டனில் உள்ள வெம்லி கால்பந்து மைதானத்திற்கு 200 மீற்றர் தொலைவில் வீடு கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மண் அள்ளும் இயந்திரத்திற்கு சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட பெரிய இரும்பு வெடி குண்டு ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து, அப்பணியாளர்கள் உடனே இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித் துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குறித்த வெடி குண்டினை சோதனை செய்ததில், அவ் வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனி நாசி படையினரால் 1940ஆம் ஆண்டளவில் வீசப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

bomb

50 கிலோ எடைகொண்ட அந்த குண்டை செயலிழக்க வைக்கும் வேலையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சுமார் 400 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment