“ஹிரு பலய நிகழ்ச்சியின் மூலம் துரோகிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது”

rishad– புதுமை நம்பி

வன்னி: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்கின்ற போது அதற்கு எதிராக செயற்படும் சக்திகளின் முகத்திரையினை கிளித்தெறியும் வகையில் நேற்றைய ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்ட பலய நிகழ்ச்சி அமைந்திருந்தாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாற்று கருத்துக்களை கொண்டுள்ளதை

இதன் போது காணமுடிந்ததாக வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

முசலி மற்றும் மாந்தை பிரதேச செயலகப் பிரிவில் இடம் பெறும் முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றத்தை பிழையாக ஊடகங்கள் சில காண்பித்து வருவதால் இப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுவருகின்றனர்.கடும் போக்கு பௌத்த சிங்கள அமைப்புக்கள் முசலிக்கு படையெடுத்து மக்களை அச்சம் கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 25 வருடங்களின் பின்னர் தமது மண்ணுக்கு மீள குடியமர வருகின்ற போது இந்த மக்களது தேவைகள் தொடர்பில் கண்டறிந்து அதனை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்த மாவட்ட மக்கள் பிரதி நிதிகளின் பொறுப்பாகும்.சில அரசியல் வாதிகள் அதனை மறந்து செயற்படுகின்ற போது,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இதனை ஒரு சமூக கடமையாக நோக்கி செயற்படுகின்றதை தாங்கிக் கொள்ள முடியாத இனவாதிகள் சழல ஊடங்களை வைத்துக் கொண்டு பொய்யினை விதைக்க முற்படுகின்றனர்.

எத்தனை பொய்களை இந்த ஊடகங்கள் சொன்னாலும்,அது ஒரு போதும் உண்மையாகப் போவதில்லை.நேற்றைய தொலைக்காட்சி விவாத்த்தின் போது பல மாவட்டங்களில் சிங்கள மக்கள் எவ்வித அனுமதியுமின்றி குடியேற்றப்பட்டுள்ளனர்.இது திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றம் என்பதற்கு போதுமான ஆதரங்கள் இருந்த போதும் இது தொடர்பில் மறைத்துவாசிக்கும் சுற்றாடல் ஆர்வளர்கள் என்று கூறும் சில ஏஜண்டுகள் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு மட்டும் சுற்றாடல்,புராதன சுற்ற்றிக்கைகளை காண்பிக்கின்றனர்.

இதிலிருந்து இவர்கள் செயற்பாடுகளை எம்மால் அறிந்து கொள்ள முடி கின்றது.இவ்வாறானவர்களின் இந்த பிழையான நோக்கத்தினை அடைந்து கொள்ள முடியும் என்று கருதிய போதும்,அதற்கு எதிராக வன்னி மாவட்ட மக்களினால் விரும்ப்ப்படும் அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் ஹிரு தொலைக்காட்சி விவாத்த்தில் அளித்த விளக்கத்தால் இந்த கயவர்கள் வாயடைத்து போன காட்சி இந்த முஸ்லிம்களுக்கு பெரும் தையரித்தை வழங்கியுள்ளது.

எத்தனையோ முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் வாதிகள் இருந்த போதும்,அவர்கள் வாய் பேசாமல் மௌனித்து மரணித்து போய்விட்டார்களா ? என்று கேள்வி எழுப்பும் நிலை தோன்றியுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்,அதாவுல்லா,பௌசி போன்ற முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் எதற்காக மௌனம் சாதித்து நிற்கின்றனர் என்பது புரியாத்தொன்றல்ல,இந்த மனிதர்களுக்கு மத்தியில் துணிந்து சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்ற போது அதற்காக அல்லாஹ்வை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தும் உண்மையினை உணர்வுள்ள ஒரு தேசிய தலைவராக றிசாத் பதியுதீன் நேற்று செயற்பட்டதை நாம் பாராட்டுவதுடன்,அவருக்காக இறை பிரார்த்தனைகளை செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் என்பதை உணர்த்தவிரும்புகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் மன்னார் மட்டுமல்ல வ்வுனியா மக்களது காணிகளை பெற்றுக் கொடுப்பதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்பது இந்த நுற்றண்டில் எந்தவொரு அரசியல் வாதியும் செய்து காட்டாத ஒரு சாதைனையினை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்து காட்டியதை நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.
எது எவ்வாறாக இருந்தாலும் அனைத்து சமூகங்களையும் பிரதி நிதிகாளக கொண்டு செயற்படும் எமது வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் சிறுபான்மை சமூகங்களுக்கு அநியாயாம் இழைக்கப்படுகின்ற போது அதற்காக குரல் கொடுத்துவந்துள்ளதை நினைவுபடுத்துவதுடன்,எதிர் காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தமது முழுயைமான பங்களிப்பினை வழங்குவதற்கு எமது ஒன்றியம் தயாராக இருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by

One response to ““ஹிரு பலய நிகழ்ச்சியின் மூலம் துரோகிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது””

  1. வடக்கிலிருந்து பலவந்தமாக நிர்க்கதியாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நிலை 24 வருடங்களுக்கு மேலாகியும் எவ்வித பொருள் பொதிந்த நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாது, அரசியல் காய் நகர்த்தல்களுக்காகவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு இழப்புகளும், 24 வருட காலத்தில் இழக்கப்பட்ட எதுவும் கருத்திற்கு எடுக்கப்படாது, தனிமனித உயர்விற்கான சாதனமாக அவர்களது மீள் குடியேற்றம் கையாளப்பட்டுள்ளது. துன்பத்தில் உழலும் மக்களுக்கு அவ்வப்போது, அரசிடமிருந்து பெறப்படும் சில்லறைகளில் சிலதை வீசி எறிந்து, கடதாசியில் மீள்குடியேற்றம் நடத்தப்பட்டதாகக் காட்டி தமது கீழ்த்தரமான ஆசைகளை அரசும், அதன் அடிவருடிகளும் செய்து கொண்டிருந்திருக்கின்றார்கள்.

    போதாக் குறைக்கு, வெளிநாடுகளில் இந்த அப்பாவி வடக்கு அகதி முஸ்லிம்களின் பெயரைப் பாவித்து, அம்மக்ளுக்கு உதவுதல் என்ற பெயரில் பணம் பண்ணும் வேலையே நடந்திருக்கின்றதை செய்திகளும், நிகழ்வுகளும் வெளிப்படுத்துகின்றன.

    உதாரணத்திற்கு: மன்னார் பட்டின பெரிய கடையில் அப்பகுதி மக்களால், பள்ளியொன்ற தமது சொந்தப் பணத்தில் இரண்டு மாடிகள் கட்டி முடிக்கப்பட்டும், மூன்றாவது மாடி கூரையற்ற நிலையில் பகுதி ‌மு டிக்கப்பட்டும் இருந்த நிலையில், அரப நாடு ஒன்று உதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு, பணம் பெறப்பட்டு, திருப்தியற்ற முறையில், பணம் பெற்றவர்களே ‌அப்பள்ளியைக் கட்டி, அந்த அரபிகளைக்‌ கொணர்ந்து அவர்கள், அப்பள்ளி முழுவதையும் கட்டிக் கொடுத்தது போன்ற மாயை ஏற்படுத்தி, திறப்பு விழாவும் வைத்து, அவற்றைப் புகைப்படங்களாக்கி, தமது இணையத் தளத்தில், முழுப் பள்ளியையும் கட்டிக் கொடுத்ததாக பகிரங்கப்டுத்திக் கொண்டிருக்கின்றனர்.

    இது மேற்கண்ட அரசியல்வாதியால், பள்ளிவாசல் விடயத்திலே நடத்தி முடிக்கப்பட்ட பொதுச் சேவை என்பதை அவரால் மறுக்க முடியாது. ஆதாரம் http://www.raf-thani.com/index.php?group=view&rid=2170&SLANG=E

    அதிகமானோர் தாமறியாத விடயங்களில் மூக்கை நுழைத்து இவ்வரசியல்வாதிகளைப் புகழ்வதன் மூலம், வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநியாயங்களை மூடி மறைப்பதுடன், அம்மக்களுக்குக் கிடைக்க வேண்டிய எதனையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை உருவாக்கும் நிகழ்வையே நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை இனியாவது உணர வேண்டும்.

    நீங்கள் ஒருவருக்குப் பட்ட கடனுக்காக அந்நபருக்கு உதவுவதை யாரும் தடை செய்ய மாட்டார்கள், ஆனால் அதற்காக நீங்கள் ஆயுதமாகப் பாவிக்கும் விடயங்கள், மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பது போலவும், பொது மக்கள் நலனைப் பாதிக்கும் அபாயங்களாகவும் இருக்கக் கூடாது என்பதே மக்கள் கருத்து. ஆதலால் அடி நுனி தெரியாமல், இடையில் புகுந்து உங்கள் விஷக் கருத்துக்களை மக்களுள் விதைக்காதீர்கள் என அல்லாஹ்வின் பெயரால் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a comment