இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி: பாலியல் இலஞ்சம் கோரியமை உண்மை!!

sl cricket womenகொழும்பு: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முகாமையாளர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் கோரல் குற்றச்சாட்டு உண்மையானதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது. விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் அது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகளில் குற்றவாளிகளாகக் காணப்படுவோருக்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சரால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் செயற்படுமாறு இலங்கை இடைக்கால நிர்வாக சபைக்கு ஆலோசனை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

sl cricket women
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி: பாலியல் இலஞ்சம் கோரியமை உண்மை!!

இந்தியாவில் கடந்த வருடம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடருக்கு இலங்கை மகளிர் அணியை தெரிவுசெய்தபோது பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முகாமையாளர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க மூவர் கொண்ட குழுவை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்திருந்தார்.

Published by

Leave a comment