இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் இலஞ்சம்

sl cricket womenகொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீராங்கணைகளிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை, விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய, ஒய்வுபெற்ற நீதியரசர் நிமல் திஸாநாயக்க தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) கையளித்தது.

இலங்கை கிரிக்கெட்டின் மகளிர் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின், அதிகாரிகளுக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளதாக கடந்த 2014ஆம் ஆண்டு பல குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால், மேற்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

sl cricket women

Published by

Leave a comment