– ஹாசிப் யாஸீன்
கல்முனை: கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா இடம்பெற்று வருகின்றன. இவ்விளையாட்டு விழாவின் பெண் தாதியர்கள், உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூடைப்பந்து போட்டி வுளு பெரி அணிக்கும் வைட் டெவில் அணிக்குமிடையில் கல்முனை கார்மல் பத்திமா தேசிய பாடசாலை மைதானத்தில் (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இப்போட்டியில் வுளு பெரி அணி 12 கோள்களையும், வைட் டெவில் அணி 04 கோள்களையும் பெற்றன. இதில் வுளு பெரி அணி 08 மேலதிக கோள்களால் வெற்றி பெற்று போட்டியின் சம்பியனானது.
இப்போட்டி நிகழ்வுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் வீ.பிரேமினி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கதிர்வீச்சு வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.டிலக்குமார், தாதிய பரிபாலகி திருமதி கே.சிவானந்தராஜா, நிர்வாக உத்தியோகத்தர் பீ.குமுதினி உள்ளிட்ட தாதியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனின் வழிகாட்டலில் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment