அமைச்சர்கள் நால்வர் இராஜினாமா

srilanka_parliament-8[1]எம்.ஐ.அப்துல் நஸார்

கொழும்பு: அரசாங்கத்திலிருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவித்ரா வன்னியாராச்சி, டிலான் பெரேரா, மஹிந்தயாபா அபேவர்தன மற்றும் சீ.பி.ரத்நாயக்க ஆகியோரே தமது அமைச்சுப் பதவிகளிலிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நிர்க்கதிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்த்தில் இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை எனவும் பதவி விலகிய முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் முறை சீர்திருத்தத்திற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

இன்று அரசாங்கத்தை நடத்துவது ரணில் விக்ரமசிங்கவே. பழிவாங்குவதைத் தவிரை வேறு எதுவும் நடைபெறவில்லை. பொலீஸ்மா அதிபருக்கு கட்டளைகளைப் பிறப்பிப்பதும் இவரே எனவும் முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment