காத்தான்குடி: காத்தான்குடியில் அமையப்பட்டுள்ள நூதனசாலை தொடர்பான வாத, பிரதி வாதங்களுக்கு அப்பால், ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை விமர்சிப்பது, ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை விமர்சிப்பது ஒரு புறம், ஆனால் அரசியல் லாபங்களுக்காக எந்த அரசியல் சாராத எந்த இயக்கத்தை சேர்ந்த உலமாக்களையும் விமர்சிப்பதையும், ஷரீயத்தை.மீறுவதையும் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.
அது எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவல்களாயினும் சரியே!!!
அண்மையில் காத்தான்குடியில் நடை பெற்ற அரசியல் உரை ஒன்றில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அவரது உரையில் பகிரங்கமாக உலமாக்களை விமர்சித்துடன், குறிப்பாக காத்தான்குடியை சேர்ந்த மூத்த உலமாவும், இலங்கையின் கண்ணியமான.உலமாக்களில் ஒருவரான ஆதம் லெப்பை ஹஸ்ரத் அவர்களை அவர்கள் “அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு கட்டுப்பட்டு ஷரீயாவின் வரையரைக்குள் காத்தான்குடி நூதனசாலை விடயத்தில் முன்னெடுக்கவும்” என்ற கருப் பொருளில் நிகழ்த்தப்பட்ட ஜூம்ஆ உரையை எதிர்த்து கடுமையாக விமர்சித்ததை மேற் கோள் காட்டி எமது “Slyouth Network” சார்பாக எமது கண்டனத்தை உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம்.
*அதே நேரம் இவ்விடயத்தை ஆதம்லெப்பை ஹஸ்ரத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்ததுடன், அனைவரின் ஹிதாயத்துக்காக துஆ செய்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இது தொடர்பான முழுமையான ஆதாரங்கள் எம்மிடம் உள்ள நிலையில் தன் கடமையை செய்த கண்ணியமான உலமாக்களை விமர்சனம் செய்யும், ஜும்மா பிரசங்கங்கள்,குத்பா மிம்பர்களுக்கு பங்கம் விளைவிக்கும் இப்படிப்பட்ட தவறான செயற்பாடுகளுக்கு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா, காத்தான்குடி சம்மேளனம் பகிரங்க கண்டனத்தை வெளியிட வேண்டும் என்பதையும் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே நேரத்தில் இந்த விடயத்தை யாரும் அரசியல் லாபங்களுக்காக பெரிது படுத்த வேண்டாம் எனவும் ஏனைய கட்சிகளுக்கும் கண்ணியத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.இனிமேலும் எந்த அரசியல் லாபங்களுக்காகவும் அரசியல் சார்பற்ற உலமாக்களை விமர்சிப்பதையும், இஸ்லாமிய ஷரீயத்தை மீறுவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
*கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புள்ளாஹ் அவர்களின் மூலமும் ஏனைய அரசியல் தலைவர்களின் பணிகளின் மூலம் முஸ்லீம் சமூகம் மேலும் பிரயோசனப்பட வேண்டும் எனவும் துஆ செய்கின்றோம்.
Published by

Leave a reply to mohdrislan Cancel reply