மரணித்துவிட்ட மகளிர் அமைப்புக்கள்

pungudutivu– MJ

காத்தான்குடி: சமூகவலைத்தளங்களின் அபார வளர்ச்சியின் காரணமாக இளம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் கொலைகளும் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 18 வயதுடைய மாணவி வித்யாவின் கற்பழிப்புக் கொலையானது, டெல்லி மாணவியின் கற்பழிப்புக் கொலையைவிடவும் சோகத்தை இலங்கையில் மாத்திரமன்றி, முழு உலகிழும் வாழும் தமிழ் பேசும் இதயங்களை காயப்படுத்தியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததற்குப் பின்னர் வடகிழக்கில் பாலியல் தொல்லைகள் அதிகரித்திருக்கின்றன. யுத்த காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஆயுதக் கலாச்சாரங்கள் இருந்ததால் இவ்வாறான பாலியல் சேஷ்டைகள் எள்ளளவும் தலைதூக்க முடியாத நிலை காணப்பட்டன.

தனியார் வகுப்புக்களில் இருந்து அரசாங்க அலுவலகம் வரைக்கும் குறிப்பாக பெரும்பாலான இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கனவனிடமோ, தன் பெற்றோரிடமோ கூறமுடியாத அளவுக்கு சில அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன.

வேலை முக்கியம். இதனால் அனுசரித்தே போகவேண்டும் என்ற நிலை வறிய பிரதேசங்களில் மாத்திரமன்றி வளர்ச்சியடைந்த பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸாரிடம் சென்று முறையிட முடியாத நிலையில் எத்தனையோ இளம்பெண்கள் இத்தகைய பாலியல் கொடுமைகளை கண்டுகொள்ளாமல், பழகிவிட்ட தொல்லைகள் போலவே அன்றாடம் தங்களை இழந்து வருகின்றனர்.

pungudutivu

வட்டி, வங்கிக் கடன், வேலை வாய்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்காக இளம் பெண்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

மகளிர் அமைப்புக்கள் என்றும் இலங்கையில் பல பிரதேசங்களில் மகளிர் சிலர் பணியாற்றுகின்றனர். என்றாலும் பெரும்பாலான மகளிர் அமைப்புக்கள் சீசன் வியாபாரம் போன்றே தங்களது பங்களிப்பைச் செய்கின்றனர்.

வருடத்தில் ஒருமுறைவரும் மகளிர், தாய் தினத்திற்காக உறுப்பினர்களை அழைத்து, விருந்தோம்பிவிட்டு கலையும் பரிதாபமே மகளிர் சங்ககங்களிடத்தில் காண முடிகிறது.

காத்தான்குடியிலும் சில மகளிர் அமைப்;புக்கள் இருக்கின்றன. இவ்வமைப்புக்கள் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் குறிச்சி கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்த்து கொடுப்பதிலும், பிரதி ரமழானில் ஓர் இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்து ஓர் கஞ்சிக்கோப்பையுடன் கலைந்து செல்லும் மகளிர் அமைப்புக்களாகவே செயற்படுகின்றமையும் ykkஅவர்களது விசேட அம்சமாகும்.

child-abuse2[1]

கடந்த வருடம் எமது ஊரில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட சிறுமியும் மாணவியுமான பாத்திமா சீமாவின் மரணம் ஊரை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. கொலையாளிக்கான தண்டனை, அதுபற்றிய விபரங்கள் எதுவுமே இத்தகைய மகளிர் அமைப்புக்களின் சிந்தனைகளில் இருந்து கலைந்துவிட்டன.
இலங்கையில் மகளிருக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பாரிய அபாய நிலையில் இன்றைய பெண் சமூகம் இருந்துவருகிறது.

அரசியல் செல்வாக்குகளில் மறைந்துள்ள காமுகர்கள், இளம்பெண்களைக் கற்பழித்து கொன்றுவிடும் பரிதாபம் இன்று இலங்கையைச் சூழ்ந்திருக்கும் அபாய சமிக்கைகளாகும்.
கற்பழிப்பதே ஓர் பாரிய குற்றமாக இருக்கின்ற நிலையில், அநியாயமாக கொன்றும் அழித்தும் விடுகின்றனர். இதில் அதிகமாக இரையாவது ஏழைப் பெண்களும், அரசியல் செல்வாக்கற்க குடும்பப் பெண்களுமே என்பது மிகப் பரிதாபகமாகும்.

குறிப்பாக பாடசாலைச் சிறுமிகள், மாணவிகள், அலுவலக இளம்பெண்கள் இவர்களைக் குறிவைத்து அரசியல் பின்புலத்துடன் தூண்டில்கள் போட்டு காத்திருக்கின்றனர் காமுகர்கள்.
பணம் பத்தும் செய்யும். மனிதாபிமானமே இல்லாமல் மிருகங்களைவிடக் கேவலமாக சிறுமிகளும் பெண்களும் இன்று இரையாக்கப்படுகின்றனர்.

அநியாயமாகக் கொல்லப்பட்ட மாணவி வித்யாவுக்காக இலங்கையில் எந்த மகளிர் அமைப்பு குரல் கொடுத்தது? எந்த அரசியல்வாதி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்தார்கள் என்பதை தாங்களே தங்களிடம் கேட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுபலசேனாவை அடக்க கடந்த அரசாங்கத்துக்கு முடியாமல் இருந்த போது, மக்கள் புரட்சியால் பொதுபலசேனாவை இன்று செல்லாக்காசாக ஒதுக்கிவைத்துள்ளதும் எம்மைப்போன்ற சாதாரண மக்களே.
எனவே, மகளிர் அமைப்புக்கள் பொறுப்புடன் இயங்கவேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை நிறைவேற்றும்வரை பின்வாங்கக்கூடாது. மகளிரின் குரல்கள் ஓடுக்கப்படக்கூடாது. ஓங்கி ஒலிக்கவேண்டும்.

Published by

Leave a comment