வாழைச்சேனை: ”தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம்” வாகனத் தொடரணி கடந்த வெள்ளிக்கிழமை நன்பகல் மட்டகளப்பு வாழைச்சேனை பிரதேசத்தை வந்தடைந்தது. வாகனத் தொடரணியை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு வாழைச்சேனை எம்.பீ.சீ.எஸ் முன்பாக மட்டு பிராந்திய தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளா் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.
சமாதானத்திற்கான செய்தியுடன் பயணித்த தொடரணிக்கு இருமருங்கிலும் கூடியிருந்த மட்டக்களப்பு வாழைச்சேனை இளைஞா்,யுவதிகளும் பொது மக்களும் அமோக வரவேற்பளித்திருந்தனர்.
சிரச, சக்தி, நியூஸ்fபெஸ்ட், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த வாகனத் தொடரணி வெற்றிகரமாக முன்நோக்கி செல்ல மட்டக்களப்பு வாழைச்சேனை மக்களும் இளைஞா்களும் தமது வாழ்த்தினை தெரிவித்தனா்.
இதன் போது கோறளைப்பற்று,மத்தி,மேற்குஆகிய பிரதேச செயலகங்களின் செயலாளா்கள்,பிரதேச சபையின் தவிசாளா்,செயலாளா்கள்,பொலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Published by




Leave a comment