டுபாய்: ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் பங்கு கணிசமாக குறைந்து வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டும், துடுப்பாட்ட ஆதிக்கத்தைக் குறைக்கவும், துடுப்பாட்ட பவர் பிளேயை அகற்ற ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒரு நாள் போட்டிகளில் கடைசி 10 ஓவர்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 5 பீல்டர்களை அனுமதிக்கவும் ஐசிசி குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தக் குழு முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ளே தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டின் பல்வேறு விவகாரங்களை விவாதிக்கையில் இந்த முடிவை எடுத்து, பரிந்துரை மேற் கொண்டுள்ளது.
முதல் 10 ஓவர்களில் கட்டாயமாக 2 பிடிஎடுப்பவர்கள் இருப்பது அவசியம் என்ற விதிமுறையும், துடப்பாட்ட பவர் பிளே விதிமுறையும், கடைசி 10 ஓவர்களில் 4 பீல்டர்களே 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே அனுமதிக்கப்படும் விதிமுறை ஆகியவற்றை அகற்ற பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் துடுப்பு அளவு குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஐசிசி முடிவெடுக்காது என்று தெரிகிறது. அதேபோல் ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக் கெட்டில் வீசப்படும் அனைத்து வகையான ‘நோ-போல்’களுக்கும் ‘fப்ரீ ஹிட்’ முறை கொண்டு வரவும் குழு பரிந்துரை செய்துள்ளது.
Published by


Leave a comment