டுபாய்: கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பொலிஸார், பஸ் சாரதி உட்பட 6 வீரர்களும் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்குப்பின், எந்த ஒரு அணியும் பாகிஸ்தானுக்கு தங்களது வீரர்களை அனுப் புவது இல்லை முடிவு செய்தது.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப்பின் சிம்பாப்வே அணி 2 ’20க்கு 20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறது. முதல் போட்டி வரும் 22ம் திகதி லாகூரில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, இத்தொடரில் பங்கேற்க எந்த ஒரு நடுவர் குழுவையும் பாகிஸ்தான் அனுப்ப முடியாது என சர்வதேச (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்பிரல் மாதம் நடைப்பெற்ற ஐ.சி.சி., கூட்டத்தில், பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையால், அந் நாட்டுக்கு நடுவர்களை அனுப்ப வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதை ஐ.சி.சி., மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தானாகவே, நடுவர்களை நியமனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Published by
![ICC-logo-lrg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/icc-logo-lrg1.jpg?w=147&h=150)
Leave a comment