கொழும்பு: யுத்த வெற்றி நிகழ்வு இம்முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. தாய்நாடு அமைப்பு என்ற அமைப்பே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த அமைப்பு அண்மையில் அரசியல்வாதிகள் மற்றும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அமைப்பு மே 8ம் திகதி முதல் யுத்த வெற்றி வாரத்தை அறிவித்தது.
Published by


Leave a comment