ஊர்காவற்துறை: புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற பாடசாலை மாணவியே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலைக்கு சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலை சென்ற மகளை காணவில்லை என பெற்றொர்கள் பாடசாலையில் சென்று பார்த்ததுடன், அயல் முழுவதிலும் விசாரித்துள்ளனர்.
இரவு ஆகியும் பிள்ளை வீட்டிற்கு வரவில்லை என்று ஊ¡ர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, பிள்ளை காதலித்த நபருடன் சென்றிருக்கலாம். பின்னர் வீட்டிற்கு வருவார் என பொலிஸார் பொறுப்பற்ற விதமாக பதிலளித் துள்ளனர்.
பிள்ளையை காணாது பெற்றோர் பல இடங்களில் தேடிய போது நேற்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள காட்டு பக்கத்தில் செருப்பு இருப்பதாக வீதியால் சென்றவர்கள் கண்டு பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின்னர் பிள்ளையின் பெற்றோர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட போது கால்கள் இரண்டும் அலரி மரத்தில் கட்டப்பட்ட நிலையில், சடலத்தின் மீது பனை ஓலையினால் மூடப்பட்டும் காணப்பட்டுள்ளார்.
சடலத்தினை கண்ட பெற்றோர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய பின்னர் ஊர்காவற் துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
அதன்போது ஊர்காவற்துறை நீதி மன்ற நீதிபதி சடலத்தினை பார்வை யிட்ட பின்னர் குறித்த யுவதி 3ற்கும் மேற்பட்ட நபர்களினால் துஷ்பிரயோகம் செய் யப்பட்டு கொலை செய்யப்பட்டி ருக்கின்றார் என்றும் மாணவியின் உடம்பில் வெட்டு காயங்கள் காணப்ப டுவதாக கூறி சடலத்தினை யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவியின் கொலைச் சம்பவத்தினை கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.அதன்போது அந்த பகுதியில் உள்ள 3 பேர் வருகை தரவில்லை என்றும் அந்த மூவரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரி வித்தனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக் கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Published by


Leave a comment