காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 இன்று வெள்ளிக்கிழமை இரவு அதாவது தற்போது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விஷேட கூட்டத்தில் ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
இதில் பெரும் திரளான பொது மக்கள் உட்பட ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்படி கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆற்றிவரும் உரை விரைவில் ஓடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Published by

Leave a comment