ரியல் மெட்ரிட் அதிர்ச்சித் தோல்வி: இறுதிப்போட்டியில் பார்ஸிலோனாவைச் சந்திக்கிறது ஜிவின்டஸ்

juvintus– MJ

மெட்ரிட்: ஐரோப்பிய சம்பியன் கிண்ண அரையிறுதிப்போட்டியின் நொக்கவுட் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் அணியை 3:2 எனும் கோல்வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் மைதானத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது இத்தாலியின் முன்னணிக் கழகமான ஜிவின்டஸ்.

நேற்றிரவு இடம்பெற்ற அபாரமான ஆட்டத்தில் ரியல் மெட்ரிக் அணிக்குக் கிடைத்த பல அரிய சந்தர்ப்பங்கள் நழுவப்பட்டன. இவ்வாட்டம் 1:1 என சம நிலையில் நிறைவடைந்த போதிலும் கோல் வித்தியாச அடிப்படையில் ஜிவின்டஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது.பெனால்டடி உதை மூலமான கோல் ஒன்றையே ரியல் மெட்ரிட் அணியால் பெற முடிந்தது. இவ் கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொடுத்தார்.

juvintus

ஆனால் ஜிவின்டஸ் அணியின் முன்னணி வீரர் சண்டியாகோ பேர்னாபி இறுதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து 3:1 என தனது அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஜேர்மனியின் பேர்லின் நகரில் இவ்விறுதியாட்டம் இடம்பெற இருக்கிறது.

ஜிவின்டஸ் 2003ம் ஆண்டிற்குப் பின்னர் முதன் முறையாக சம்பியன் லீக் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ஜிவின்டஸ் 1985 மற்றும் 1996 ஆகிய இரு தடவைகள் ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment