“பூர்வீக நூதணசாலை இஸ்லாமிய வரையரைக்குள் அமையப் பெற வேண்டும்” எனக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினால் கவன அளுத்த போராட்டம் இன்று காத்தான்குடியில் மேற் கொள்ளப்பட்டது

museum protest– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி நூதண சாலை இஸ்லாமிய வரையரைக்குள் அமையப் பெற வெண்டும் எனக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினால் (13.05.2015 புதன்கிழமை) இன்று காலை 09.00 மணிக்கு காத்தான்குடி நகர சபைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் மேற் கொள்ளப்பட்டது.

முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் அண்மையில் காத்தான்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட பூர்வீக நூதணசாலையானது நூறு வீதம் இஸ்லானிய வரையரைக்குள் அதிலும் குறிப்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகிய வற்றினால் வழங்கப்பட்ட மார்க்க தீர்ப்புகளுக்கு எற்ப மேற்படி நூதணசாலை காத்தான்குடியில் அமையப்பெறல் வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை இன்று மேற் கொள்வதாக அவ்வியக்கத்தின் சூறாசபை உறுப்பினர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நழீமி) இதன் போது தெரிவித்தார்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது நூதண சாலை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் சுலோக அட்டைகளை அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் சுமந்து கொண்டிருந்ததினை காணக்கூடிதாக இருந்தது.

museum protest

museum protest (2)

museum protest (3)

protest museum

Published by

Leave a comment