சிம்பாப்வே வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

CRICKET-PAK-BANலாஹூர்: பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ள சிம்பாப்வே அணி வீரர்களை தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கவைப்பதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. மாறாக பேர்ல் கொன்டினென்டல் நட்சத்திர ஹோட்டலில் தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் தங்கவைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு சென்றிருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்தவொரு சர்வதேச அணியும் பாகிஸ்தானில் கிரிககட் தொடர்களில் விளையாடவில்லை.

இந்நிலையில் தற்போது சிம்பாப்வே பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு தமது நாட்டு அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பாகிஸ்தானிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிம்பாப்வே அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு பாகிஸ்தான் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

அதன்படி பாகிஸ்தான் விமான நிலையத்தில் வந்திறங்கும் சிம்பாப்வே வீரர்கள் ஹோட்டலுக்கு செல்லும் வரையில் சுமார் 1500 சட்ட அமுலாக்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புடன் அவர்களது பயணம் துல்லியமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு பிரிவினரின் ஹெலிகொப்டர்கள் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீரர்கள் தங்கும் ஹோட்டல் மற்றும் மைதானஙகளில் பாதுகாப்பு பொலிஸார் மற்றும் துப்பாக்கி வீரர் களும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment