கொழும்பு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.நிதிமோசடி விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டமை சட்டபூர்வமற்றது எனக் கோரி கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் கோத்தாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு, நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்பட்டது. மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கவிருந்த நிலையில் மூன்றாவது நீதியரசராகவிருந்த புவனக அலுவிஹார இறுதி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணைகளிலிருந்து விலகிக்கொண்டார்.
இதன்படி, ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரு ஆகிய நீதியரசர்கள் இந்த மனுவை விசாரித்தனர். இந்த விடயம் குறித்து பிரதம நீதியரசருக்கு அறிவித்து மற்றுமொரு நீதியரசரை நியமிக்குமாறு சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.நிதி குற்றப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்குச் செல்லும் எவராயிருந்தாலும் அவரைக் கைது செய்யும் நியதி தற்போதுள்ளதால் மனுதாரர்களும் அந்த எச்சரிக்கைக்குள் உள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
எனினும் எவராவது நபர் விசாரணைக்கு வராமலிருந்தால் அல்லது அந்த எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் கைது செய்யப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் மனுதாரர் தொடர்பில் அது போன்ற நிலை இல்லாததால் அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டு நீதிதமன்றத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு விடயம் தொடர்பாடகவும் நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி விசாரணைக்கு வாக்கு மூலமளிக்க மனுதாரர் தயாராகவுள்ளதாகவும் எந்த வேளையிம் அதனைத் தவிர்ப்பதற்கு முடியாதென்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதில் ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால் வாக்குமூலம் வழங்க வரும் போது கைது செய்வதற்கு உள்ள நிலையே. என குறிப்பிட்ட நீதிபதி இதுவரை இவ்வாறு வாக்குமூம் வழங்க வந்த பத்துப் பேர் கைது செய்யப்பட் டுள்ளனர் என்றார்.
பொலிஸ் மா அதிபரினால் சட்டத்துக்கு எதிரான விதத்தில் இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த விசாரணை நடவடிக்கை பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள செயலகத்தின் மூலம் இடம்பெறுவதாகவும் நீண்ட காலத்துக்கு முன்பு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூம் வழங்க போது மான காலம் வழங்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.
Published by
![Gotabhaya_Rajapaksa_20090426[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/gotabhaya_rajapaksa_200904261.jpg?w=128&h=150)
Leave a comment