7.4: நேபாளத்தில் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம்!!

nepalகத்மாண்டு: நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த புதிய பூகம்பத்தின் அளவு 7.4 புள்ளிகள் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 30 செக்கன்களுக்கு இது நீடித்துள்ளது.

நேபாள தலைநகர் கத்மண்டுவிலும், இந்திய தலைநகர் டில்லியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.

கடந்த மாதம் தாக்கிய பூகம்பம் 7.8 புள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதில் 7000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போதைய பூகம்பம் கத்மாண்டுவுக்கும், எவரெஸ்ட் சிகரத்துக்கும் இடையில் மையம் கொண்டிருந்தது.

nepal

Published by

Leave a comment