சாய்ந்தமருதில் ஹரீஸ் எம்.பியின் ரூபா 7 மில்லியன் நிதியில் புதிய மைதானம் துரிதமாக அபிவிருத்தி!

sainthamaruthu– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்திருந்த தாமரை மைதானத்திற்குள் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் சேதமாக்கப்பட்ட வைத்தியசாலையும், பாடசாலையும் நிர்மாணிக்கப்பட்டதனால் இம்மைதானம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இதனால் கடந்த 11 வருட காலமாக சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களும், கழகங்களும் மைதானமின்றி கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

இதனை அடுத்து சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிரிடம் புதிய விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்துத்தருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று பாராளுமன்ற உறுப்பினரின் ‘திதுலன – கல்முனை’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கரைவாகு வொலிவேரியன் பிரதேசத்தில் 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரின் 7 மில்லியன் ரூபாவிலும் ஏனைய பிரதிநிதிகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் இம்மைதான அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருவதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

sainthamaruthu

இம்மைதான அபிவிருத்தி வேலைகளை சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் நேரடியாக செய்துவருவதுடன் இவ்வேலைகள் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிறைவடையும் நிலையிலுள்ளது. இம்மைதானம் மிக விரைவில் கழகங்களின் பாவணைக்காக கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

sainthamaruthu (2)

Published by

Leave a comment